Tuesday, January 22, 2013
King of Juices – Carrot Juice
Carrot Juice
Carrot juice is the richest source of vitamin A. The body can easily assimilate this type of vitamin A. Carrot juice not only has a rich source of vitamin A, but this juice has a good supply of vitamins B, C, D, E, G, and K.
Benefits of Drinking Carrot Juice
Carrot juice has some awesome benefits. From what I am reading, it is a juice you can drink every day. No need to add other fruit and vegetables to carrot juice, it is potent all by itself. Most juicing recipes use carrots for sweetness, but it is more to it than adding it to juice recipes for sweetness.
The carrot juice molecule is like the blood molecule. Maybe this is one of the main reasons why carrot juice is so beneficial for the body.
Here are 8 benefits of carrot juice:
1. Helps in improving and maintaining the bone structure of the teeth
2. Helps nursing mothers enhance milk quality
3. Natural solvent of ulcerous and cancerous conditions
4. Helps prevent infections of the eyes and throat, as well as tonsils and sinuses and the respiratory organs
5. Nourishes the entire system
6. Helps normalize weight as well as chemical balance in the body
7. Nourishes the optic system
8. Helps with dry skin, dermatitis, and other skin blemishes
Tuesday, January 1, 2013
அவரைக்காயின் மருத்துவகுணம்
அவரைக்காய் உங்களுக்கு பிடிக்காதா ? அப்ப அவரைக்காயின் மருத்துவகுணம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள் !!!!!
அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
* அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
* அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
* அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
* நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
* பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.
* அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
* அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
* காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.
* மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்
* முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
* சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?
சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!
சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?
சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.
அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.
சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.
சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.
சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.
சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.
சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.
சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.
மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!
இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.
நன்றி :Dr.எஸ். ராஜேந்திரன். DD CBFD
வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம் நிறைந்தது !!!!
வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம் நிறைந்தது !!!!
தகவலுக்கு நன்றி
பரமக்குடி . சுமதி
இக்கீரையின் சத்துக்கள்:
1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.
3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.
4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.
5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.
6. வல்லாரையில் இருவகை உண்டு:
சமவெளி வல்லாரை – வெளிர் பச்சை நிற இலைகளுடையது.
7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை:
கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.
8. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.
மருத்துவ குணங்கள்:
1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
4. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
5. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
8. கண் மங்கலை சரி செய்யும்.
9. சீத பேதியை நிறுத்தும்.
10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
13. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.
15. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
வல்லாரை சில எளிய வைத்தியங்கள்:
a. இரத்த சோகை (Anaemia):
1. 1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.
2. பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு
3. வல்லாரை இலைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.
b. ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்:
1. வல்லாரை இலையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.
c. தூக்கமின்மை:
1. 1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.
d. ஞாபகமறதி:
1. 5 வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து தினமும் உண்ணவும்.
e. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
f. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.
g. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.
h. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.
i. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.
j. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
k. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
வீக்கம், கட்டிகள் மறைய:-
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும்.
அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாக:-
இலைச்சாற்றைப் பிழிந்து சம அளவு நெய் சேர்ந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர வேண்டும்.
சமைத்து உண்ணும் முறை:
1. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.
2. வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.
3. இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.
4. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
5. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
6. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.
7. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
8. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
1. இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
2. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
3.சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!
ஐஸ் கட்டிகளை வைத்தும் பருக்களை விரைவில் குறைக்கலாம்!!!
தகவலுக்கு நன்றி
பரமக்குடி . சுமதி
முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். ஆகவே அவ்வாறு பயன்படுத்தினால், பிம்பிள் போவதற்கு 2-3 நாட்கள் ஆகும். அதிலும் பிம்பிளை போக்குவதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலவற்றால் பிம்பிள்கள் கரும்புள்ளிகள் போன்று தோன்றும். ஆகவே அவை ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களான கடுகு, கிராம்பு, சந்தனக்கட்டை அல்லது மூல்தானி மெட்டி ஆகியவற்றை பயன்படுத்தினால், அந்த பிம்பிள்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போய்விடும். ஆனால் அதுவே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால், ஒரே நாளில் அவை குறைந்துவிடும். அத்தகைய ஐஸ் கட்டியை பயன்படுத்தும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!!!
ஸ்டெப் 1- முதலில் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து நன்கு கழுவ வேண்டும். ஆனால் முகத்தில் இருக்கும் பிம்பிளை மட்டும் தேய்த்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு தேய்க்கும் போது, அதில் உள்ள சீல் முகத்தில் பரவி, நிறைய பிம்பிள் வந்துவிடும். ஆகவே முகத்தை வெதுவெதுப்பான நீரால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி லேசாக கழுவ வேண்டும்.
ஸ்டெப் 2- மூல்தானி மெட்டியை, சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் பிம்பிள்கள் மீது மட்டும் தடவலாம். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிளையும் குறைத்துவிடும்.
ஸ்டெப் 3- இந்த ஃபேஸ் பேக் போட்டு கழுவியவுடன், 5 நிமிடத்திற்கு ஐஸ் கட்டிகளை வைத்து, பிம்பிள் உள்ள இடத்தின் மீது தேய்க்கவும். இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை எந்த ஒரு ஃபேஸ் பேக் இல்லாமலும், தேய்க்கலாம். அதிலும் ஐஸ் கட்டிகளை வைத்து, தேய்க்கும் போது, குறைந்தது 2 ஐஸ் கட்டிகளையாவது பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சி பிம்பிளில் உள்ள அனைத்தையும் ஒரே நாளில் உருக்கிவிடும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை, இவ்வாறு தேய்த்தால், பிம்பிள் முற்றிலும் போய்விடும்.
ஸ்டெப் 4- ஐஸ் மசாஜ் செய்தப் பின்னர், சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். அதனால் பிம்பிளில் உள்ள சீல் முற்றிலும் துணியில் வந்துவிடும். பிறகு கண்ணாடியைப் பாருங்கள், பிம்பிள் குறைந்து முகம் அழகாக இருக்கும்.
குறிப்பு: பிம்பிள் வராமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். ஆனால் இது யாருக்கும் தெரியாது. வறட்சியின் காரணமாகத் தான் முகத்தில் பிம்பிள், முகப்பரு ஏற்படுகின்றன. அதிலும் காப்பியை அதிகம் குடிக்கக் கூடாது. ஏனெனில் காப்பியில் உள்ள காப்பைன் உடலில் உள்ள நீர்வறட்சியை ஏற்படுத்தும்.
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !!
டூத் பேஸ்டை உபயோகிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை !!
நமது ஒவ்வொரு நாளும் டூஸ் பேஸ்டில் இருந்துதான் துவங்குகிறது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்ற பழமொழிக்கேற்ப முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்தினர். உமிக்கரி, உப்பு, இடித்த மிளகு சேர்த்து பல் தேய்த்த காலமும் உண்டு.
ஆனால், இன்று அதிகாலையின் சுறுசுறுப்பை நம்மி ல் முதலில் விதைப்பது நறுமணம் கவழும் டூஸ் பேஸ்டுகளாகும். டூஸ் பேஸ்ட் இல்லாத ஒரு வாழ்க்கையைக் குறித்து நம்மால் சிந்திக்க கூட முடிவதில்லை. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலோர் டூஸ் பேஸ்டுகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான டூஸ் பேஸ்டுகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன.
மினி ஸ்க்ரீனில் தொடர்ந்து காட்டப்படும் டூத் ப்ரஸ், பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை வலுக்கட்டாயமாக வாங்கத் தூண்டுகின்றன. பற்கள் மற்றும் ஈறுகள் பலம் பெற என ஒரு விளம்பரம், சுகந்தமான சுவாசத்திற்க்கு இன்னொரு விளம்பரம், பற்கள் பளீரிட மற்றொரு விளம்பரம் என விளம்பரங்கள் அளிக்கும் வாக்குறுதிகளால் அடிக்கடி நாம் ப்ராண்டுகளையும் மாற்றி வருகிறோம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவே தான் டூத் பேஸ்டும். நீங்கள் விளம்பரங்களில் காண்பதுபோல ப்ரஸ் முழுக்க பேஸ்டை நிரப்பிவிட்டா பல் துலக்குகின்றீர்கள்? அவ்வாறெனில் நீங்கள் உங்கள் பற்களுக்கு தீங்கிழைக்கின்றீர்கள் என்பதுதான் உண்மை. காரணம் ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. இவ்விடத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் டூத் பேஸ்டின் அளவில் அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.
விளம்பரங்கள் உங்களை வழி தவறச் செய்துவிடும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.
ஃப்ளோரைடு
ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம் வசிக்கும் இடத் தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.
ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
1997-ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
“WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.”
ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.
பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவிற்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.
ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.
பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்று காரசாரமாக விவாதிக்க இரண்டு புறமும் வல்லுநர் அணிகள் இருக்கிறார்கள்.
ப்ளோரைடு பற்பசை நல்லதே என்று கூறும் வெப் தளங்கள்:
http://www.doctorspiller.com/fluoride.htm
http://www.dentalgentlecare.com/toothpaste.htm
ப்ளோரைடு பற்பசை மிக ஆபத்தானது என்று கூறும் வெப் தளங்கள்:
http://www.aroma-essence.com/research-reports/fluoride.html
http://www.mercola.com/2001/may/30/toothpaste.htm
http://www.sonic.net/kryptox/dentistr/dentistr.htm
ப்ளோரைடு பற்றிய பக்க விளைவுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக ‘ப்ளோரைடு செயல் கூட்டணி’ (Fluoride Action Network) என்ற அமைப்பு செயல்படுகிறது.http://www.fluoridealert.org/
தற்போது ப்ளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்ற நிலை உள்ளது. சில ஆயுர்வேத பற்பசைகளும், இயற்கை மூலிகை பற்பசைகளுமே ப்ளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளது.
பற்பசைகளில் ப்ளோரைடு உள்ளதா என எப்படி அறிவது?
பற்பசை பெட்டியிலும் ட்யூபிலும், சிறிய எழுத்துக்களில் ‘FOAMING FLUORIDATED TOOTHPASTE’ என்று எழுதப்பட்டிருக்கும். மேலும், ‘ contains 1000PPM of available fluoride’ என்றும் எழுதப்பட்டிருக்கும்.
டூத் பேஸ்டில் இதர சேர்மானங்கள்
*பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான Abrasives
*நுரையை உருவாக்கும் டிடர்ஜெண்டுகள்
*ஈரப்பதத்தை தக்கவைக்கும் humectant
*நீண்டகாலம் கெடாமலிருக்க preservatives
*நிறத்தை அளிக்கும் கலர்கள்
*சுவை அளிக்கும் flavours
*நறுமணத்தை வழங்கும் fragrance
*கால்ஸியம்
*பாஸ்பரஸ்
* மெக்னீசியம்
*வைட்டமின் டி
பல்தேய்க்க எவ்வளவு பேஸ்ட் தேவை?
முன்பு குறிப்பிட்டதைப்போலவே ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதுபோலவே பலரும் அரைமணி நேரம் பல் தேய்ப்பதில் செலவழிக்கின்றனர். இது வீணானது. நேரத்தையும் கொலைச் செய்வதாகும். ஆகவே 2 அல்லது 3 நிமிடங்களே போதுமானது. காலையில் உபயோகிக்கும் பேஸ்டின் அளவை விட இரவில் சற்று அதிகம் உபயோகிக்கலாம். ஏனெனில் காலையில் பற்களை அழகாக்கவும், இரவில் அழுக்குகளைப் போக்கவும் பற்களை துலக்குகிறோம். ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பேஸ்டின் அளவு மாறுபடும். குழந்தைகளுக்கு பெரியவர் பயன்படுத்துவதை விட குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும். கூடுதல் நேரம் பற்களை துலக்குவதால் பற்கள் பளிச்சிடாது.
பேஸ்டில் பிரச்சனைகள்
டூத் பேஸ்டில் அடங்கியிருக்கும் சேர்மானங்களை குறித்து மேலேக் கண்டோம். இவற்றில் பல இரசாயனங்கள் கலந்தவையாகும்.
உதாரணமாக நுரை வருவதற்கு சேர்க்கப்படும் டிடர்ஜெண்ட், நிறத்தை அளிக்கும் கலர்கள் ஆகியவற்றை அதிகமாக உபயோகிப்பதால் பற்களின் எனாமல் இழந்துபோகும். மேலும் பற்கள் கூசவோ அல்லது புளிப்புத்தன்மையை உணரவோ செய்யும். இதன் மூலம் சிறியவயதிலேயே பற்களுக்கு பாதிப்பு உருவாகும்.
சரி இனி மேல் பேஸ்ட் வாங்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியவை!
1.வண்ண நிறங்களை கொண்ட பேஸ்டை விட வெள்ளை நிறத்திலான பேஸ்டை வாங்குங்கள்!
2.ஃப்ளோரைடு குறைந்த பேஸ்டை தேர்வுச்செய்யுங்கள்
3.குழந்தைகளுக்காக வாங்கும் பேஸ்டில் ஃப்ளோரைடு இல்லை என்பதை உறுதிச் செய்யவும்.
4.ஜெல் பேஸ்டுகள் பற்களின் தேய்மானத்திற்கு காரணமாகும் என்பதால் க்ரீம் பேஸ்டுகளே நல்லது.
5.பற்கள் சொத்தையாக காரணமாகும் இரசாயனங்கள் அடங்கியதுதான் அப்ரேஸிவ். ஆகவே இதன் அளவு குறைந்த பேஸ்டை வாங்குங்கள்.
6.சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியன அடங்கிய பேஸ்டுகளை தவிருங்கள்.
கேன்சர் நோய் - சில உண்மைகள் !!!
கேன்சர் நோய் - சில உண்மைகள் !!!
குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?
கடந்த 16 ஆண்டுகள் ஆராய்ச்சியில் 9 லட்சம் குண்டு பேர்வழிகளின் சுகாதார அறிக்கையையும் அவர்கள் வார்த்தைகளையும் ஆராய்ந்தபோது சில உண்மைகள் தெரிய வந்துள்ளதாக கனடா கேன்சர் மருத்துவ சொசைட்டி கூறியுள்ளது.
ஆண்களில் 52 வயதுக்கு மேல் பெண்களில் 62 வயதுக்கு மேல் குண்டாக இருப்பவர்களில் பலருக்கும் புற்றுநோய் வந்துள்ளது. மார்பகம், கருப்பப, குடல், சிறுநீரகம், கல்லீரல், மூத்திரப்பைகள் ஆகியவற்றில் கேன்சர் நோய் இவர்களில் பலருக்கு வந்துள்ளது. குறிப்பாக ஆண்களில் குடல், கல்லீரல், வயிறு, வாய் என்று சில பகுதிகளில் வருவது பொதுவாக உள்ளது.
குண்டாக இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோரின், இன்சுலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். அதனால் புற்றுநோய் வரும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் பார்பரா ஒய்லி கூறுகிறார். அதனால் தான் டாக்டர்கள் நாற்பதை தாண்டினால், பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்
சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ
1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்
2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்
3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ்ல எதுவும் வைக்கவேண்டாம்
பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.
இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...
நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(ஜோஹ்ன்ஸ் HOPKINS) என்ற மருத்துவ விஞ்ஞானி சொல்கிறார்.
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (நுத்ரிதிஒநல் deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது
8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.
9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own கில்லெர் cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, எபாஸ் etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது.. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், சுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.
உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது.
சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..
4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது.
ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்.
வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு
வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு -- மருத்துவ டிப்ஸ் !!!
வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு
இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.
''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.
இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.
5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.
பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.
பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.
உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.
வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.
விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.
''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும் !''
நன்றி
பரமக்குடி சுமதி
நாட்டு வைத்தியத்தின் பயன்கள் !!
நாட்டு வைத்தியத்தின் பயன்கள் !!
தேள் கடி!!!!
தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
· எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.
· நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.
ஆண்மைக் குறைவு!!!!!!!!!!!!!!!!!
· மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
· தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
· அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
· அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.
· படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
தாது விருந்தி
· முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
· நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
· கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
· அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
· வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
உடல் மெலிய !!!!!!!!!!!!!!!
· 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.
· இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.
· கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
· 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.
· நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
கை நடுக்கம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
· காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.
· வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
கருத்தரித்த பெண்களுக்கு !!!!!!!!!!!!!!!
· கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
· குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.
· நெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால்
· கைகால் வீக்கம் வராமலிருக்கும்.
· அமுக்கராங் கிழங்கை இடித்து 200-மில்லி நல்ல தண்ணீரில் கொதிக்கவைத்து 100-மில்லியாக சுண்டியதும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு காலை மாலை 2-வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.
மாதவிடாய் வலி தீர !!!!!!!!!!
· மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும்.
· மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.
கருப்பை கோளாறுகள் நீங்க !!!!!!!
· நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
· அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.
· முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.
· அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்
.
குழந்தை பாக்கியம் பெற !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
· வாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு வருவதுடன் தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தாய்ப்பால் சுத்தமாக
· தேன் 15-பங்கும், அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகுரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.
நன்றாக ஜீரணமாக !!!!!!!!!!!
· வெள்ளரிப்பிஞ்சு, சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடவும்.
· எலுமிச்சம்பழ ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2-வேளை சாப்பிடவும்.
· தினமும் 4-பேரிட்சம்பழம் சாப்பிடவும்.
· எலுமிச்சம்பழத் தோலை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் சாப்பிடவும்.
· ஓம வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிடவும்.
பல நோய்களுக்கு நோய் நிவாரணியாக பயன்படும் அதிமதுரம்..!
பல நோய்களுக்கு நோய் நிவாரணியாக பயன்படும் அதிமதுரம்..!
மருத்துவ குணங்கள்..!
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்க ள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
கல்லடைப்பு நீங்க...
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
இருமல் நீங்க...
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க...
அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
இருமல் நீங்க...
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..
வரட்டு இருமல் நீங்க...
அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
வழுக்கை நீங்கி முடி வளர ....
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
தலைவலிகள் நீக்க...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.
நன்றி
பரமக்குடி சுமதி
தொப்பையே குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!
தொப்பையே குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!
பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.
உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒர...
ுசில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்...
உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!
இடுப்பை அளவிடுங்கள்... அபாயத்தைக் கணக்கிடுங்கள்...
நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!
திட்டமிட்ட ஆரோக்கிய உணவு
ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.
உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்... உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.
உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது' என்றார்.
உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்...
காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.
உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.
முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.
அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.
குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.
குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.
காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.
கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.
பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். 'எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே... அதே பாணியில் பருமனையும் கரைப்போம்
கீரைகளின் பயன்கள் !!!
கீரைகளின் பயன்கள் !!!!
அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.
இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.
அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.
பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.
பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.
கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.
தொண்டை புண்ணுக்கு நிவாரணம் தரும் உணவுகள்..!!
தொண்டை புண்ணுக்கு நிவாரணம் தரும் உணவுகள்..!!
குளிர்காலம் என்றாலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளில் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவையே முதன்மையானவை. ஏனென்றால் அப்போது அதிக குளிர்ச்சி காரணமாக, உடலில் உள்ள வெப்பமானது வெளியேறும். எனவே இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த காலத்தில் சாப்பிடும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக குளிர்ச்சியான உணவுகள் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டு, இறுதியில் புண்ணை ஏற்படுத்திவிடும்.
ஆகவே தொண்டையில் கரகரப்பு ஏற்படும் போதே, ஒரு சில உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த கரகரப்பு முற்றினால், பின்னர் தொண்டையில் புண் ஏற்பட்டு, எந்த ஒரு உணவையும் சாப்பிட முடியாத அளவில் செய்துவிடும். சொல்லப்போனால் எச்சிலைக் கூட விழுங்க முடியாது. இந்த நிலையிலும் தொண்டையில் ஏற்படும் புண்ணை தடுக்க உணவுகள் தான் உதவுகின்றன. எனவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், தொண்டையில் புண் வராமல் தடுப்பதோடு, வந்த புண்ணையும் சரிசெய்யலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சிக்கன் சூப்: இருமல் இருந்தால், மருத்துவர்களின் மருந்து என்னவென்றால், அது சூடான சூப் தான். ஏனெனில் அவை தொண்டையின் உள்ள புண்ணை சரிசெய்து, அதனால் ஏற்படும் எரிச்சலைத் தடுத்து, தொண்டைக்கு சற்று இதமாக இருக்கும்.
மசாலா டீ: டீ போடும் போது அதில் அதிகமான காரப் பொருட்கள் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். அதிலும் காரப்பொருட்களான கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.
இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருள். அதிலும் அந்த இஞ்சியை தண்ணீரிலோ அல்லது ஆல்கஹாலிலோ போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு ஒரு நிமிடத்தில் சரியாகிவிடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
தயிர் :அனைவரும் தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், தயிரை சாப்பிட்டால், அவை வயிற்றை தான் குளிரச் செய்யும். அதிலும் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.
எலுமிச்சை: சாறு மற்றும் தேன் சிட்ரஸ் பழங்களில் ஆன்டி-வைரல் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரஸால் ஏற்பட்டிருக்கும் புண்ணானது குணமாகிவிடும்.
சேஜ் இலை: மூலிகை செடிகளில் ஒன்றான சேஜ் என்னும் மூலிகை இலையில், உடலில் ஏற்படும் உள்காயம், புண் போன்றவற்றை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய இலைகளை சூப், சாலட் அல்லது ஏதேனும் பானங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளை சரிசெய்யலாம்.
வெதுவெதுப்பான ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் சளி ஏதேனும் பிடித்தருந்தால் அப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்ற தோன்றினால், வெதுவெதுப்பான நீரில் ஓட்ஸை கலந்து, அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால், ஈஸியாக விழுங்க முடியும். அதுமட்டுமின்றி, அவை தொண்டைக்கு ஒரு படலம் போன்றதை ஏற்படுத்தி, புண்ணை எளிதில் குணமாக்கிவிடும்.
மிளகு: காரப் பொருட்களில் ஒன்றான மிளகை சாப்பிட்டால், தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும் போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகர்: தொண்டைப் புண்ணை சரிசெய்யும் பொருட்களில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் சிறந்தது. ஆகவே இதனை சாலட் சாப்பிடும் போது அதன் மேல் ஊற்றியோ அல்லது அப்படியே ஒரு ஸ்பூனோ சாப்பிடலாம்.
தேங்காயின் மருத்துவக் குணங்கள்.....!!!
தேங்காயின் மருத்துவக் குணங்கள்.....!!!
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
1.
தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
2.
தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.
3.
தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
4.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
5.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
6.
தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
7.
மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.
8.
சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள்:
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
1. தைலங்கள்;தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
2. எளிதில் ஜீரணமாகும்:
தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகச, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
3. வயிற்றுப் புண்கள்:
தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?
1. மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.
2. வைரஸ் எதிர்ப்பு:தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism)பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.
3. ஆண்மைப் பெருக்கி:
முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
1.
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.
2.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
3.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.
4.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
5.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் "ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
6.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
7.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.
கௌதம புத்தரின் வாழ்வு....!!
கௌதம புத்தரின் வாழ்வு....!!
"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
புத்தரின் பிறப்பு :
கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.
புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.
சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.
துறவறம் :
உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.
துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.
பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.
ஞானோதயம் :
பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.
அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.
கொள்கைகள் :
ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.
கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.
இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.
கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.
புத்தரின் போதனைகள் :
புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.
"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.
நான்கு உண்மைகள் :
1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.
நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.
இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.
அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :
1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.
2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.
3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.
4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.
5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.
6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.
7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.
8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.
சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.
மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால் !!
மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால் !!!
நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள்.
ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது.
ஒட்டகப் பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது.
இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர் எம் எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது.
தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர்களுக்கு ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் தெரிந்திருந்த போதிலும், நகர்ப்புறங்களில் ஒட்டகப் பால் கிடைப்பதில்லை. தற்போது ஆர்எம்எஃப்-ன் சராஸ் கடைகளில் இது கிடைக்கிறது.
ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்எம் எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத் தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் முக்கிய உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் சிறிது உப்புச்சுவை அதிகமாக இருக்கும். இப்போது அல் அய்ன் டெய்ரி நிறுவனம் ஒட்டகப் பாலில் இருந்து சுவையான ஐஸ் கிரீமைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளது. “இப்போது சந்தையில் இல்லாத ஒரு புது வகையான ஐஸ் கிரீமை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பல்வேறு சுவையுடன் கூடிய ஐஸ் கிரீம்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வருகிறோம். இது இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும்’ என்று அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் சயிஃப் அல் தர்மகி தெரிவித்தார்.
இந்த ஐஸ் கிரீம், பசும்பால் கலப்பு இல்லாமல் சுத்தமான ஒட்டகப் பால் மூலம் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால் :
சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.
ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.
தகவலுக்கு நன்றி
மதுரை >> ஆதில்
வேப்ப இலை மகத்துவம்.....!
வேப்ப இலை மகத்துவம்.....!
* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.
* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.
* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.
* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.
* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.
* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.
* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.
* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது...
நன்றி -பரமக்குடி சுமதி
மூச்சுத்திணறல் ( ஆஸ்த்மா ) முதலுதவி செய்வது பற்றிய தகவல் !
மூச்சுத்திணறல் ( ஆஸ்த்மா ) முதலுதவி செய்வது பற்றிய தகவல் !
ஒவ்வாமை, புகை பிடித்தல், அதிக உணர்ச்சி வசப்படுதல், கவலைப்படுதல், சுவாச உறுப்புகளில் தொற்று நோய் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக, ஒருவரது சுவாசச் சீர்குலைவே பொதுவாக ஆஸ்த்மா எனப்படுகிறது.
சுவாசப்பாதை சுருங்குவதால், மார்பில் இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் தோன்றுகின்றன. சிரமத்துடன் மூச்சுவிடுவதின் காரணமாக மூச்சுவிடும்போது ஓசை உண்டாகிறது.
ஆஸ்த்மாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்னைகளை அறிந்து, அதற்கேற்ப நடந்துக்கொள்ள வேண்டும். மூச்சுத் திணறல் ஏற்படாமலிருக்கத் தகுந்த மருந்துகளை குறிப்பாக, சுவாசத்தின் மூலம் செலுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
முதன்முதலாகப் பாதிக்கப் பட்டிருந்தாலோ, மருத்துவ சிகிச்சை எதுவும் ஏற்கெனவே மேற்கொள்ளப் படவில்லை என்றாலோ அல்லது மருத்துவ சிகிச்சை எடுத்தும் பலனில்லை என்றாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
ஆஸ்த்மா அடையாளங்கள்
1. மூச்சுத் திணறல், பேசுவதில் சிரமம் உண்டாகும்.
2. முகத்தில் நீலம் படரும். குறிப்பாக, உதடுகளைச் சுற்றி
முதலுதவி
1. பாதிக்கப்பட்டவரை ஒரு மேஜையின் மீது அமரச் செய்யவும். கைகளை மேஜையின் மீது ஊன்றிக் கொண்டு முன்புறம் குனியச் செய்யவும்.
2. அறையினுள் சுத்தமான காற்று வர வழி செய்ய வேண்டும். பனிக்காலம் இல்லையென்றால் எல்லா ஜன்னல்களையும் திறந்து வையுங்கள்.
3. ஆசுவாசப்படுத்துங்கள். மருந்துகளை உட்கொள்ளும்படித் தூண்டுங்கள்.
4. இன்ஹேலர் பயன்படுத்தியும், 10 அல்லது 15 நிமிடங்களில் பயன் தெரியவில்லை என்றாலோ, அவரது உதடுகளைச் சுற்றி நீலம் படர்ந்தாலோ, உடனே மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.
கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ?
கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!
இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.
*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.
* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.
* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.
கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.
அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.
வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.
படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.
1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.
2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.
3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.
4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.
6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.
7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.
8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.
நன்றி
பரமக்குடி சுமதி
மஞ்சளின் மருத்துவ குணம் !!
"மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அது தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் "
நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது 'ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.
இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.
மஞ்சள் (மூலிகை) மகிமை
மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
மஞ்சளின் வகைகள்:
1. முட்டா மஞ்சள்
2. கஸ்தூரி மஞ்சள்
3. விரலி மஞ்சள்
4. கரிமஞ்சள்
5. காஞ்சிரத்தின மஞ்சள்
6. குரங்கு மஞ்சள்
7. காட்டு மஞ்சள்
8. பலா மஞ்சள்
9. மர மஞ்சள்
10. ஆலப்புழை மஞ்சள்
மஞ்சளின் இயல்புகள்:
முட்டா மஞ்சள்
இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.
கஸ்தூரி மஞ்சள்:
இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.
விரலி மஞ்சள்:
இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.
மஞ்சளின் பயன்பாடுகள்:
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
*பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
*சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
*உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
*பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
*வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
*இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
*நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
*
2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
*
3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
*
4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
*
5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
*
6. "மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்".
*
"மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்".
*
7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்". தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
*
8. "மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்"
*
9. " மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்"
10. "மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்"
11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.
13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.
மேலும் சில தகவல்கள்:
1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.
4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன...
நீங்கள் வாங்கும் தங்கம் தரமானதா ? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க !
மளமள' வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொண்ட பெண்கள் இல்லையென்றே சொல்லலாம்..
பெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம் வைத்திருக்கிறார்கள்..
என்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.
கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும்.
அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் (KARAT)என்பது.
தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும்.
அதாவது
24 கேரட்,
22 கேரட்
18 கேரட்
14 கேரட்
10 கேரட்
9 கேரட்
8 கேரட்
என தரம் பிரிக்கின்றனர்.
24 கேரட் தங்கத்தில் 99.9 சதவிகிதம் சுத்த தங்கமும், 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தூய தங்கமும், 18 காரட் தங்கத்தில் 75 சதவிகிதம் தூய தங்கமும், 14 காரட் தங்கத்தில் 58.5 சதவிகிதமும், 10 கேரட்டில் 41.7 சதவிகிதமும், 9 கேரட்டில் 37.5 சதவிகதமும், 8 கேரட் தங்கத்தில் 33.3 சதவிகிதமும் தூய தங்கம் உள்ளது.
இதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. அதாவது ஆபரணத்தங்கத்தில் 22 காரட் சுத்த தங்கத்தையே பெரும்பாலான ஜீவல்லரி நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து விற்கின்றனர். 22 காரட் தங்கத்தில் 97.61% சுத்த தங்கம் இருக்கும்.
வாடிக்கையாளரின் விருப்பமும் அதுவே.
இந்த வகையான தங்கத்தைதான் நாம் டிவியிலும், நாளிதழ், வார இதழ் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர். இதையே ஆபரத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள்.
தங்கத்தின் தரத்தை அறிய ஹால்மார்க்:
பெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை.
இந்த முத்திரையானது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ISI தர முத்திரையைப் போன்றதுதான் தங்கத்தின் தரத்தை அறியும் BIS ஹால்மார்க் முத்திரை.
இந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த அமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது.
BIS முத்திரையை யார் கொடுப்பார்கள்?
BIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற (License) டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும்.
ஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொல்லர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.
தங்கம் வாங்கறீங்களா? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க..
நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருந்தால் போதாது. அந்த ஹால்மார்க் முத்திரையில் நகையின் தரம் எத்தனை சதவிகிதம் என்பது குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.
தவறான ஹால்மார்க் நகைகளை எப்படி கண்டுபிடிப்பது?
நீங்கள் 22 காரட் நகையென கடைகளில் வாங்கிய பிறகு, ஏதாவது ஒருகாரணத்திற்காகவோ.. அல்லது சோதனை செய்து பார்க்கும்பொழுதே அந்த நகை 18 காரட் தரமுடைய நகை என்பதை தெரியவந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக தவறான ஹால்மார்க் முத்திரையை வழங்கிய டீலரின் லைசென்சை BIS அலுவலகம் ரத்து செய்துவிடும்.
தரமற்ற நகைகளை விற்ற ஜூவல்லரி கடையும் வாங்கிய நகைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு தர மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.
இவர்தான் ஹால்மார்க் முத்திரையை வழங்கினார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
இது மிக சுலபம். நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஆபரணத் தங்கத்திலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இருக்கும். BIS ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரையை வழங்கியிருப்பார்கள். அதாவது ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்திரை அடையாளமானது, மற்ற எந்த டீலருக்கும் அதே முத்திரையை கொடுக்கமாட்டார்கள். ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரை தான் வழங்கப்படும். அதனால் குறிப்பிட்ட ஹால்மார்க் முத்திரைக்கு சொந்தக்காரர் இவர்தான் என எளிதாக அந்த அடையாளப்படுத்தி கண்டுபிடித்துவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள BIS அலுவலகங்களின் முகவரிகள்:
SOUTHERN REGIONAL OFFICE
C.I.T CAMPUS, IV CROSS ROAD,CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 .
sro@bis.org.in
COIMBATORE BRANCH OFFICE
5th Floor, Kovai Towers,
44 Bala Sundaram Road,
Coimbatore 641 018.
LandMark- on RTO road, near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; Fax: 0422-2216705
cbto@bis.org.in
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜூவல்லரியில் (நகைகடைகளிலும்) உள்ள நகைகளிலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை பதிந்தே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நகைகள் வாங்கினால் அதன் தரம் என்ன எத்தனை காரட்.. அதில் BIS ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் நன்றாக கவனித்து வாங்குங்கள்...
உங்களின் பணத்தின் மதிப்புக்கேற்ற நகைகளையும் நீங்கள் வாங்க வேண்டாமா என்ன? கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த தகவல்களனைத்தையும் நகைக்கடைகளிலேயே பெற்று மனதுக்கு திருப்தியாக நகைகளை வாங்கலாம்.
நன்றி
மதுரை ஆதில்
Subscribe to:
Posts (Atom)