Tuesday, January 1, 2013

மூச்சுத்திணறல் ( ஆஸ்த்மா ) முதலுதவி செய்வது பற்றிய தகவல் !

மூச்சுத்திணறல் ( ஆஸ்த்மா ) முதலுதவி செய்வது பற்றிய தகவல் ! ஒவ்வாமை, புகை பிடித்தல், அதிக உணர்ச்சி வசப்படுதல், கவலைப்படுதல், சுவாச உறுப்புகளில் தொற்று நோய் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக, ஒருவரது சுவாசச் சீர்குலைவே பொதுவாக ஆஸ்த்மா எனப்படுகிறது. சுவாசப்பாதை சுருங்குவதால், மார்பில் இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் தோன்றுகின்றன. சிரமத்துடன் மூச்சுவிடுவதின் காரணமாக மூச்சுவிடும்போது ஓசை உண்டாகிறது. ஆஸ்த்மாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்னைகளை அறிந்து, அதற்கேற்ப நடந்துக்கொள்ள வேண்டும். மூச்சுத் திணறல் ஏற்படாமலிருக்கத் தகுந்த மருந்துகளை குறிப்பாக, சுவாசத்தின் மூலம் செலுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். முதன்முதலாகப் பாதிக்கப் பட்டிருந்தாலோ, மருத்துவ சிகிச்சை எதுவும் ஏற்கெனவே மேற்கொள்ளப் படவில்லை என்றாலோ அல்லது மருத்துவ சிகிச்சை எடுத்தும் பலனில்லை என்றாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆஸ்த்மா அடையாளங்கள் 1. மூச்சுத் திணறல், பேசுவதில் சிரமம் உண்டாகும். 2. முகத்தில் நீலம் படரும். குறிப்பாக, உதடுகளைச் சுற்றி முதலுதவி 1. பாதிக்கப்பட்டவரை ஒரு மேஜையின் மீது அமரச் செய்யவும். கைகளை மேஜையின் மீது ஊன்றிக் கொண்டு முன்புறம் குனியச் செய்யவும். 2. அறையினுள் சுத்தமான காற்று வர வழி செய்ய வேண்டும். பனிக்காலம் இல்லையென்றால் எல்லா ஜன்னல்களையும் திறந்து வையுங்கள். 3. ஆசுவாசப்படுத்துங்கள். மருந்துகளை உட்கொள்ளும்படித் தூண்டுங்கள். 4. இன்ஹேலர் பயன்படுத்தியும், 10 அல்லது 15 நிமிடங்களில் பயன் தெரியவில்லை என்றாலோ, அவரது உதடுகளைச் சுற்றி நீலம் படர்ந்தாலோ, உடனே மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.

No comments:

Post a Comment