Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts
Tuesday, January 1, 2013
மூச்சுத்திணறல் ( ஆஸ்த்மா ) முதலுதவி செய்வது பற்றிய தகவல் !
மூச்சுத்திணறல் ( ஆஸ்த்மா ) முதலுதவி செய்வது பற்றிய தகவல் !
ஒவ்வாமை, புகை பிடித்தல், அதிக உணர்ச்சி வசப்படுதல், கவலைப்படுதல், சுவாச உறுப்புகளில் தொற்று நோய் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக, ஒருவரது சுவாசச் சீர்குலைவே பொதுவாக ஆஸ்த்மா எனப்படுகிறது.
சுவாசப்பாதை சுருங்குவதால், மார்பில் இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் தோன்றுகின்றன. சிரமத்துடன் மூச்சுவிடுவதின் காரணமாக மூச்சுவிடும்போது ஓசை உண்டாகிறது.
ஆஸ்த்மாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்னைகளை அறிந்து, அதற்கேற்ப நடந்துக்கொள்ள வேண்டும். மூச்சுத் திணறல் ஏற்படாமலிருக்கத் தகுந்த மருந்துகளை குறிப்பாக, சுவாசத்தின் மூலம் செலுத்தப்படும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
முதன்முதலாகப் பாதிக்கப் பட்டிருந்தாலோ, மருத்துவ சிகிச்சை எதுவும் ஏற்கெனவே மேற்கொள்ளப் படவில்லை என்றாலோ அல்லது மருத்துவ சிகிச்சை எடுத்தும் பலனில்லை என்றாலோ, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
ஆஸ்த்மா அடையாளங்கள்
1. மூச்சுத் திணறல், பேசுவதில் சிரமம் உண்டாகும்.
2. முகத்தில் நீலம் படரும். குறிப்பாக, உதடுகளைச் சுற்றி
முதலுதவி
1. பாதிக்கப்பட்டவரை ஒரு மேஜையின் மீது அமரச் செய்யவும். கைகளை மேஜையின் மீது ஊன்றிக் கொண்டு முன்புறம் குனியச் செய்யவும்.
2. அறையினுள் சுத்தமான காற்று வர வழி செய்ய வேண்டும். பனிக்காலம் இல்லையென்றால் எல்லா ஜன்னல்களையும் திறந்து வையுங்கள்.
3. ஆசுவாசப்படுத்துங்கள். மருந்துகளை உட்கொள்ளும்படித் தூண்டுங்கள்.
4. இன்ஹேலர் பயன்படுத்தியும், 10 அல்லது 15 நிமிடங்களில் பயன் தெரியவில்லை என்றாலோ, அவரது உதடுகளைச் சுற்றி நீலம் படர்ந்தாலோ, உடனே மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.
கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ?
கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!
இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.
*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.
* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.
* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.
கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.
அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.
வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.
படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.
1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.
2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.
3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.
4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.
6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.
7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.
8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.
நன்றி
பரமக்குடி சுமதி
மஞ்சளின் மருத்துவ குணம் !!
"மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அது தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் "
நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது 'ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.
இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.
மஞ்சள் (மூலிகை) மகிமை
மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
மஞ்சளின் வகைகள்:
1. முட்டா மஞ்சள்
2. கஸ்தூரி மஞ்சள்
3. விரலி மஞ்சள்
4. கரிமஞ்சள்
5. காஞ்சிரத்தின மஞ்சள்
6. குரங்கு மஞ்சள்
7. காட்டு மஞ்சள்
8. பலா மஞ்சள்
9. மர மஞ்சள்
10. ஆலப்புழை மஞ்சள்
மஞ்சளின் இயல்புகள்:
முட்டா மஞ்சள்
இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.
கஸ்தூரி மஞ்சள்:
இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.
விரலி மஞ்சள்:
இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.
மஞ்சளின் பயன்பாடுகள்:
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
*பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
*சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
*உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
*பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
*வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
*இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
*நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
*
2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
*
3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
*
4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
*
5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
*
6. "மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்".
*
"மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்".
*
7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்". தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
*
8. "மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்"
*
9. " மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்"
10. "மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்"
11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.
13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.
மேலும் சில தகவல்கள்:
1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.
4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன...
நீங்கள் வாங்கும் தங்கம் தரமானதா ? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க !
மளமள' வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொண்ட பெண்கள் இல்லையென்றே சொல்லலாம்..
பெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம் வைத்திருக்கிறார்கள்..
என்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.
கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும்.
அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் (KARAT)என்பது.
தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும்.
அதாவது
24 கேரட்,
22 கேரட்
18 கேரட்
14 கேரட்
10 கேரட்
9 கேரட்
8 கேரட்
என தரம் பிரிக்கின்றனர்.
24 கேரட் தங்கத்தில் 99.9 சதவிகிதம் சுத்த தங்கமும், 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தூய தங்கமும், 18 காரட் தங்கத்தில் 75 சதவிகிதம் தூய தங்கமும், 14 காரட் தங்கத்தில் 58.5 சதவிகிதமும், 10 கேரட்டில் 41.7 சதவிகிதமும், 9 கேரட்டில் 37.5 சதவிகதமும், 8 கேரட் தங்கத்தில் 33.3 சதவிகிதமும் தூய தங்கம் உள்ளது.
இதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. அதாவது ஆபரணத்தங்கத்தில் 22 காரட் சுத்த தங்கத்தையே பெரும்பாலான ஜீவல்லரி நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து விற்கின்றனர். 22 காரட் தங்கத்தில் 97.61% சுத்த தங்கம் இருக்கும்.
வாடிக்கையாளரின் விருப்பமும் அதுவே.
இந்த வகையான தங்கத்தைதான் நாம் டிவியிலும், நாளிதழ், வார இதழ் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர். இதையே ஆபரத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள்.
தங்கத்தின் தரத்தை அறிய ஹால்மார்க்:
பெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை.
இந்த முத்திரையானது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ISI தர முத்திரையைப் போன்றதுதான் தங்கத்தின் தரத்தை அறியும் BIS ஹால்மார்க் முத்திரை.
இந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த அமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது.
BIS முத்திரையை யார் கொடுப்பார்கள்?
BIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற (License) டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும்.
ஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொல்லர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.
தங்கம் வாங்கறீங்களா? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க..
நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருந்தால் போதாது. அந்த ஹால்மார்க் முத்திரையில் நகையின் தரம் எத்தனை சதவிகிதம் என்பது குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.
தவறான ஹால்மார்க் நகைகளை எப்படி கண்டுபிடிப்பது?
நீங்கள் 22 காரட் நகையென கடைகளில் வாங்கிய பிறகு, ஏதாவது ஒருகாரணத்திற்காகவோ.. அல்லது சோதனை செய்து பார்க்கும்பொழுதே அந்த நகை 18 காரட் தரமுடைய நகை என்பதை தெரியவந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக தவறான ஹால்மார்க் முத்திரையை வழங்கிய டீலரின் லைசென்சை BIS அலுவலகம் ரத்து செய்துவிடும்.
தரமற்ற நகைகளை விற்ற ஜூவல்லரி கடையும் வாங்கிய நகைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு தர மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.
இவர்தான் ஹால்மார்க் முத்திரையை வழங்கினார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
இது மிக சுலபம். நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஆபரணத் தங்கத்திலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இருக்கும். BIS ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரையை வழங்கியிருப்பார்கள். அதாவது ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்திரை அடையாளமானது, மற்ற எந்த டீலருக்கும் அதே முத்திரையை கொடுக்கமாட்டார்கள். ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரை தான் வழங்கப்படும். அதனால் குறிப்பிட்ட ஹால்மார்க் முத்திரைக்கு சொந்தக்காரர் இவர்தான் என எளிதாக அந்த அடையாளப்படுத்தி கண்டுபிடித்துவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள BIS அலுவலகங்களின் முகவரிகள்:
SOUTHERN REGIONAL OFFICE
C.I.T CAMPUS, IV CROSS ROAD,CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 .
sro@bis.org.in
COIMBATORE BRANCH OFFICE
5th Floor, Kovai Towers,
44 Bala Sundaram Road,
Coimbatore 641 018.
LandMark- on RTO road, near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; Fax: 0422-2216705
cbto@bis.org.in
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜூவல்லரியில் (நகைகடைகளிலும்) உள்ள நகைகளிலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை பதிந்தே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நகைகள் வாங்கினால் அதன் தரம் என்ன எத்தனை காரட்.. அதில் BIS ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் நன்றாக கவனித்து வாங்குங்கள்...
உங்களின் பணத்தின் மதிப்புக்கேற்ற நகைகளையும் நீங்கள் வாங்க வேண்டாமா என்ன? கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த தகவல்களனைத்தையும் நகைக்கடைகளிலேயே பெற்று மனதுக்கு திருப்தியாக நகைகளை வாங்கலாம்.
நன்றி
மதுரை ஆதில்
Subscribe to:
Posts (Atom)